search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்: பா.ஜ.க. கூட்டத்தில் கலவரம் - போலீஸ் மீது கல்வீச்சு, 2 பேருந்துகள் எரிப்பு
    X

    குஜராத்: பா.ஜ.க. கூட்டத்தில் கலவரம் - போலீஸ் மீது கல்வீச்சு, 2 பேருந்துகள் எரிப்பு

    குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் பா.ஜ.க.வினர் நடத்திய பொதுகூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், இரண்டு பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டது.
    சூரத்:

    குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியில் பா.ஜ.க. யுவ மோர்சா அமைப்பின் மாநில தலைவர் ருத்விஜ் பட்டேல் கலந்துகொண்ட பொதுகூட்டம் நடந்தது. இந்த பகுதி பட்டிதர் அமைப்பினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த கூட்டத்தை எதிர்த்து பட்டிதர் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது பட்டிதர் அமைப்பைச் சேர்ந்த சிலர் அப்பகுதியில் இருந்த பா.ஜ.க. யுவ மோர்சா அமைப்பினரின் விளம்பர பதாகைகளை கிழித்து சேதப்படுத்தினர்.

    இதையடுத்து பட்டிதர்களுக்கும் - பா.ஜ.க.வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும், அப்பகுதியில் சென்ற இரண்டு பேருந்துகளுக்கு சில மர்ம நபர்கள் தீவைத்தனர். இதில் இரண்டு பேருந்தும் முழுவதுமாக தீக்கிரையானது. அதிர்ஷ்டவசமாக இந்த கலவரத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார், பட்டிதர் அமைப்பைச் சேர்ந்த சுமார் 17 பேரை கைது செய்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய ருத்விஜ் பட்டேல், 'இந்த கலவரம் சிலரால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மற்ற அனைவரும் எங்களுக்கு ஆதரவாக தான் இருக்கிறார்கள்', என்றார்.

    இந்த கலவரம் குறித்து பட்டிதர் அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் கூறியதாவது:-

    பட்டிதர் அமைப்பினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எந்தவித பொதுகூட்டங்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள் என போலீசாரிடம் கூறியிருந்தோம். போராட்டம் அமைதியாக நடந்தது ஆனால் போலீசார்தான் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள், என கூறினார்.
    Next Story
    ×