search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி வீட்டுக்கு சென்ற பிரிவினைவாத தலைவர் கைது
    X

    சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி வீட்டுக்கு சென்ற பிரிவினைவாத தலைவர் கைது

    காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி வீட்டுக்கு சென்ற பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே அங்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சப்ஸார் அகமது பட்டை பாதுகாப்பு படையினர் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர். இதற்கு பிரிவினைவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்கள் முழு அடைப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சுட்டு கொல்லப்பட்ட பட்டின் வீட்டுக்கு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

    இதைத்தொடர்ந்து யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து யாசின் மாலிக்கை ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×