search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெஜ்ரிவாலிடம் இருந்து ஆம் ஆத்மியை மீட்டெடுங்கள்: முன்னாள் தலைவர்களுக்கு மிஸ்ரா அழைப்பு
    X

    கெஜ்ரிவாலிடம் இருந்து ஆம் ஆத்மியை மீட்டெடுங்கள்: முன்னாள் தலைவர்களுக்கு மிஸ்ரா அழைப்பு

    கெஜ்ரிவாலிடம் இருந்து ஆம் ஆத்மியை மீட்டெடுங்கள் என்று யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட முன்னாள் தலைவர்களுக்கு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கபில் மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கபில் மிஸ்ரா முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றார். குறிப்பாக கெஜ்ரிவால் அமைச்சர் ஒருவரிடம் ஒருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் அதற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளதாகவும் கூறி வருகிறார். 

    இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்களை கெஜ்ரிவால் ஆதரவு தலைவர்கள் மறுத்து வருகின்றனர். மேலும் வெற்றுப் புகார்கள் என்று கூறியதோடு அவரது ஆதரவாளர்கல் கபில் மிஸ்ரா மீது தாக்குதலிலும் ஈடுபட்டனர். 

    இந்நிலையில், கெஜ்ரிவாலிடம் இருந்து ஆம் ஆத்மியை மீட்டெடுங்கள் என்று யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷனுக்கு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார். 

    மேலும் கட்சியில் இருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட பல்வேறு தரப்பினருக்கும் மிஸ்ரா அழைப்பு விடுத்தார். அதற்காக தொலைபேசி எண் ஒன்றினையும் கொடுத்து மிஸ்டு கால்டு விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரா, ”கட்சியில் இருந்து வெளியேறிய சிலரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அந்த நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை நான் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்தேன். குறிப்பாக கட்சியின் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பிய யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெளியேறிய தலைவர்கள் கட்சியை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.



    ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய காலத்தில் யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் இருவரும் மிகப்பெரிய பலமாக திகழ்ந்து வந்தனர். பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து அவர்கள் வெளியேறினர்.
    Next Story
    ×