search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவின் அடுத்த ‘இலக்கு’ மேற்கு வங்காளம்: அமித்ஷா
    X

    பா.ஜனதாவின் அடுத்த ‘இலக்கு’ மேற்கு வங்காளம்: அமித்ஷா

    டெல்லி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது தான் பாரதிய ஜனதாவின் அடுத்த இலக்கு என்று தெரிவித்தார்.
    கொல்கத்தா:

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதேபோல் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மணிப்பூர், கோவாவிலும் ஆட்சியை கைப்பற்றியது.

    டெல்லியில் நடந்த மாநகராட்சி தேர்தலிலும் பா.ஜனா அமோக வெற்றி பெற்றது. 3 மாநகராட்சியையும் அந்த கட்சி தக்க வைத்தது.

    இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெறுவது தான் பா. ஜனதாவின் அடுத்த இலக்கு என்று அமித்ஷா கூறியுள்ளார். பா.ஜனதா தலைவராக அவர் கொல்கத்தாவில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    பசுவதை தடுப்பு நமது அரசியல் சாச முன்னுரிமையில் உள்ளது. இதற்காக யாரும் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ள முடியாது.

    இந்த வி‌ஷயத்தில் பா.ஜனதா உறுதியாக இருக்கிறது. பசு பாதுகாப்பு அமைப்பினர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளார். அனைவரும் சட்டம் - ஒழுங்குக்கு கட்டுப்பட வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. இதனை நாங்கள் அவர்களது வலுவாக தெரிவித்து உள்ளோம்.

    பா.ஜனதாவின் அடுத்த இலக்கு மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது தான். நாங்கள் மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு வரும் போது வங்காள தேச எல்லையை கண்டிப்பாக மூடி விடுவோம்.



    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பாரதிய ஜனதாவை பார்த்து பயப்படுகிறார். எங்கள் மீது உள்ள அச்சத்தால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதாவின் வளர்ச்சியை பார்த்து மிரண்டு போய் இருக்கிறார்.

    திரிணாமுல் காங்கிரஸ் அப்பட்டமான ஊழலில் ஈடுபடுகிறது. அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.

    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்களது தலையாய பணியாகும். இந்த ஆட்சி வகுப்பு கலவரத்தை அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
    Next Story
    ×