search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    25 வீரர்கள் பலியான பின் சி.ஆர்.பி.எப் தலைவர் பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி நியமனம்
    X

    25 வீரர்கள் பலியான பின் சி.ஆர்.பி.எப் தலைவர் பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி நியமனம்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 25 வீரர்கள் நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து, சி.ஆர்.பி.எப் தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஜிவ் ராய் பட்னாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர். பி.எப்.) அங்கு முகாமிட்டு நக்சலைட்டுகளை ஒடுக்கி வருகின்றனர்.

    சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சாலை அமைத்து வரும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது படை பிரிவை சேர்ந்த 99 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது நக்சலைட்டுகள் நடத்திய அதிரடி தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் தமிழர்கள். நக்சலைட்டுகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கொடூரமானது. இதனால் நாடே மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 25 வீரர்கள் நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து, சி.ஆர்.பி.எப் தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி ராஜிவ் ராய் பட்னாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் 3 லட்சம் துணை ராணுவ படை வீரர்களுக்கும் அடுத்த 32 மாதங்கள் அதாவது டிசம்பர் 2019ம் ஆண்டு வரை தலைமை தாங்குவார். நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
    Next Story
    ×