search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோகன் பகவத்தை ஜனாதிபதி வேட்பாளராக ஏன் அறிவிக்க கூடாது?: சிவசேனா கேள்வி
    X

    மோகன் பகவத்தை ஜனாதிபதி வேட்பாளராக ஏன் அறிவிக்க கூடாது?: சிவசேனா கேள்வி

    ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கவர்னராக இருக்கும்போது மோகன்பகவத்தை ஜனாதிபதி வேட்பாளராக ஏன் அறிவிக்க கூடாது? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
    மும்பை:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதத்தில் முடிவடைவதையொட்டி விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். ஆனால் இதுபற்றி பாரதிய ஜனதா இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை. வேறு நபரை வேட்பாளராக நிறுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    இதுதொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-



    பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கவர்னர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, மோகன் பகவத்தை ஏன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கூடாது. நாடு இந்து ராஜ்ஜியமாக மாற வேண்டும் என்பது எங்களது கொள்கை. இதற்கு மோகன் பகவத் பொருத்தமான நபராக இருப்பார் என்பதால்தான் நாங்கள் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூறுகிறோம்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த மோடி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவது பற்றி எனக்கு தெரியாது. இதுபற்றி யாரும் என்னிடம் பேசவில்லை. சரத்பவாரை தனது குரு என்று மோடி கூறியிருக்கிறார். இதற்காகத்தான் அவருக்கு பத்மவிபூ‌ஷண் விருது கொடுத்தார்கள். யாருடைய மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது.

    சதீஸ்கார் மாநிலத்தில் மத்திய படை போலீசார் 25 பேரை மாவோயிஸ்டுகள் கொன்றிருக்கிறார்கள். தீவிரவாதிகள் நக்சலைட்டுகள் போன்றவர்களை ஒழிப்பதற்குதான் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை ஒழித்ததாக கூறினார்கள். அப்படியானால் சதீஸ்காரிலும், காஷ்மீரிலும் ரூபாய் நோட்டு செல்லாது திட்டம் சரியாக செயல்படவில்லையா?

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×