search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ 336 கோடி செலவில் நவீனமயமாகும் மத்திய அரசின் மைய அச்சகம்
    X

    ரூ 336 கோடி செலவில் நவீனமயமாகும் மத்திய அரசின் மைய அச்சகம்

    தலைநகர் டெல்லியில் இயங்கி வரும் மத்திய அரசுக்கு சொந்தமான அச்சகம் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    புதுடெல்லி:

    மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் டெல்லியில் அச்சகம் இயங்கி வருகின்றது. 150 ஆண்டுகளை கடந்து இயங்கிவரும் இந்த அச்சகத்தில் தான் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளிட்ட மிக முக்கிய ஆவணங்கள் அச்சிடப்படுகின்றன. மேலும், பொதுமக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் ஆகியவையும் இங்கு தான் அச்சிடப்படுகின்றன.

    பழமையான இந்த அச்சகத்தில் உள்ள கருவிகள் மிகவும் சேதமடைந்திருப்பதால் ஆவணங்கள் அச்சடிக்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இதனால், இந்த அச்சகத்தை முற்றிலும் நவீனப்படுத்த நிதிக் குழு எடுத்த முடிவை  மத்திய நகர்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு ஏற்றுக் கொண்டுள்ளார்.



    நாளொன்றுக்கு 16 லட்சம் பக்கங்கள் அச்சடிக்கும் திறன் கொண்ட இந்த அச்சகத்தை 45 லட்சம் பக்கங்கள் அச்சடிக்கும் திறன் கொண்டதாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பலவண்ண அச்சடிப்பு கருவிகள் தற்போது இல்லையெனவும், விரைவில் அக்கருவி வாங்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும் அச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×