search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜன் உள்ளிட்ட நால்வருக்கு 7 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி
    X

    போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜன் உள்ளிட்ட நால்வருக்கு 7 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி

    தாவூத் இப்ராகிமின் கூட்டாளி சோட்டா ராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு போலி பாஸ்போர்ட் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமின் நெருங்கிய நண்பரான சோட்டா ராஜனை இந்திய போலீசார் தேடிவந்தனர்.  இந்த நிலையில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் இருந்த போது சோட்டா ராஜனை சர்வதேச போலீசார் கைது செய்து சி.பி.ஐ. போலீசாரிடம் கடந்த  2015 ஆம் ஆண்டு ஒப்படைத்தனர். அவர் மீது டெல்லி, மும்பை பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோகன்குமார் என்ற பெயரில் சோட்டா ராஜன் போலி பாஸ்போர்ட் பெற்றதாக கடந்த 1998–ம் ஆண்டு சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர். போலி பாஸ்போர்ட்டு வழக்கில் சோட்டா ராஜன் மீதும் அவருக்கு உதவியாக இருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஜெயஸ்ரீ தத்தாராய் ரகட்டே, தீபக் நட்டுவர்லால் ஷா மற்றும் லலிதா லட்சுமணன் ஆகிய 3 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டாராஜன் மற்றும் மூன்று ஓய்வு பெற்ற அதிகாரிகளும் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்த நிலையில், அவர்களுக்கான தீர்ப்பு விபரங்களை நீதிபதி இன்று அறிவித்தார்.

    அதில், முறைகேடான ஆவணங்களை தயாரித்து போலி பாஸ்போர்ட் பெற்று மோசடி செய்த குற்றத்திற்காக நால்வருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×