search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு பெருகுகிறது
    X

    டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு பெருகுகிறது

    டெல்லி போராட்டத்தில் நேற்று மேலும் 100 விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.
    புதுடெல்லி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் நடத்திவரும் அரை நிர்வாண போராட்டம் நேற்று 39-வது நாளாக நீடித்தது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தலைவர் தனபால் தலைமையில் 100 விவசாயிகள் நேற்று டெல்லிக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்களையும் சேர்த்து போராட்டத்தில் தற்போது 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.



    அது மட்டுமின்றி போராட்டத்துக்கு ஆதரவு மேலும் பெருகி வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேசிய பொதுச்செயலாளர் அமர் அலாம், தமிழக தலைவர் கவுரி சங்கர் உள்ளிட்டோர் நேற்று போராட்ட களத்துக்கு வந்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதற்கிடையே, மத்திய நிதி அமைச்சகத்தின் பதில் கடிதத்துக்கு விவசாயிகள் விதித்த கெடு இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. இன்றைக்குள் அந்த கடிதம் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்று விவசாயிகள் ஆலோசித்து முடிவு செய்துள்ளனர்.

    இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், “எங்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். கோரிக்கைகளை கேட்க மறுக்கிறார். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகளா? இல்லை அடிமைகளா? மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்பேரில் நிதி அமைச்சகத்தில் இருந்து பதில் கடிதம் இன்று கிடைக்கப்பெற வேண்டும். இல்லாவிட்டால், காவிரியில் எங்களுக்கு தண்ணீர் கிடைக்காததை சுட்டிக்காட்டி மனித சிறுநீரை குடிக்கும் போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.
    Next Story
    ×