search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் பரவும் டெங்கு காய்ச்சல்: ஒரேநாளில் 745 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    கேரளாவில் பரவும் டெங்கு காய்ச்சல்: ஒரேநாளில் 745 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

    ஒரேநாளில் டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 745 பேர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கே மக்கள் திண்டாடும் நிலை உள்ளது. இதை தொடர்ந்து கேரளாவை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கேரளாவில் டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது.

    இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் படை எடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நேற்று ஒரேநாளில் டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 745 பேர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கு எடுக்கும் பணியில் மாநில சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.

    மேலும் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனே ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டும், சுய மருத்துவம் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த உதவவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×