search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 ஐகோர்ட்டுகளுக்கு 51 புதிய நீதிபதிகள் - சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு பரிந்துரை
    X

    10 ஐகோர்ட்டுகளுக்கு 51 புதிய நீதிபதிகள் - சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு பரிந்துரை

    ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் தலைமையிலான தேர்வுக்குழு அனுப்பிய 90 பேரின் பெயர்களை பரிசீலித்து, அவற்றில் இருந்து இந்த 51 பேரது பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மும்பை, பஞ்சாப், அரியானா, பாட்னா, ஐதராபாத், டெல்லி, சத்தீஷ்கார், காஷ்மீர், ஜார்கண்ட், கவுகாத்தி ஐகோர்ட்டுகளுக்கு புதிதாக 51 நீதிபதிகளை நியமிப்பதற்கான பெயர்களை மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு (கொலிஜியம்) பரிந்துரை செய்துள்ளது.

    சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் தலைமையிலான தேர்வுக்குழு அனுப்பிய 90 பேரின் பெயர்களை பரிசீலித்து, அவற்றில் இருந்து இந்த 51 பேரது பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

    இவர்களில் 20 பேர் நீதித்துறையில் அதிகாரிகளாக பணியாற்றி வருகிறவர்கள், 31 பேர் வக்கீல்கள் என தகவல்கள் கூறுகின்றன.

    51 பேரது பெயர் பட்டியலை மத்திய அரசு பரிசீலித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்கும். அதன்பின்னர் ஜனாதிபதி நியமித்து அறிவிப்பு வெளியிடுவார். 
    Next Story
    ×