search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தொகுதிகளை அதிகரிக்க வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்
    X

    பாராளுமன்ற தொகுதிகளை அதிகரிக்க வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

    இந்தியாவில் ஜனநாயக செயல்பாட்டை வலுவாக்குவதற்கு வலுவான தேர்தல் சீர்திருத்தம் தேவை என்றும், பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் இன்று நடந்த பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    கருத்தரங்கில் அவர் பேசும்போது, “நாட்டில் 1971ம் ஆண்டு இருந்த மக்கள் தொகையின் அடிப்படையில் இன்று பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. சுமார் 40 ஆண்டுகளில்  மக்கள் தொகை பலமடங்கு அதிகரித்துள்ளது.

    எனவே, பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட விதிகள் பற்றி ஆராய்வதற்கு இது சரியான நேரம். கிரேட் பிரிட்டனில் 600-க்கும் மேற்பட்ட பாராளுமன்றத் தொகுதிகள் இருக்கும்போது, அதைவிட அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஏன் தொகுதி எண்ணிக்கையை உயர்த்த முடியாது?

    ஜனநாயக செயல்பாட்டை வலுவாக்குவதற்கு வலுவான தேர்தல் சீர்திருத்தங்களை சரியான நேரத்தில் மேற்கொள்வது அவசியம்” என்றார்.

    கருத்தரங்கில் பங்கேற்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பேசுகையில், ‘தேர்தல் வாக்குறுதிகள் முழுவதும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வாடிக்கையாகிவிட்டது. தேர்தல் அறிக்கைகள் வெறும் துண்டு பேப்பர்களாக மாறிவிடுகின்றன. இதற்கு கட்சிகள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.
    Next Story
    ×