search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ஜெர்மனி நாட்டு பிரஜைக்கு கத்திக்குத்து - மாநில அரசிடம் அறிக்கை கேட்கும் சுஷ்மா
    X

    டெல்லியில் ஜெர்மனி நாட்டு பிரஜைக்கு கத்திக்குத்து - மாநில அரசிடம் அறிக்கை கேட்கும் சுஷ்மா

    டெல்லியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயது பிரஜை கத்தியால் குத்தப்பட்டு, வழிப்பறிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து டெல்லி மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்பவர்  நேற்றிரவு கீதா காலணி என்ற இடத்தின் அருகே வரும் போது ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவரால் கத்தியால் குத்தி, வழிப்பறிக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், ஜெர்மன் நாட்டு பிரஜைக்கு நேர்ந்த இந்த தாக்குதல் குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.



    இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ,”டெல்லியில் ஜெர்மன் நாட்டு பிரஜை தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளேன். மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறும் டெல்லி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என பதிவு செய்துள்ளார்.
    Next Story
    ×