search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தர பிரதேச சபாநாயகராக ஹிரிடே நாராயண் தீக்‌ஷித் தேர்வு
    X

    உத்தர பிரதேச சபாநாயகராக ஹிரிடே நாராயண் தீக்‌ஷித் தேர்வு

    உத்தர பிரதேச சட்டமன்ற சபாநாயகராக ஹிரிடே நாராயண் தீக்‌ஷித் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
    லக்னோ:

    கோவா, பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர்த்து பிற மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. 325 இடங்களைக் கைப்பற்றியது. அம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

    இந்த நிலையில் உத்தர பிரதேச சட்டமன்ற சபாநாயகராக ஹிரிடே நாராயண் தீக்‌ஷித் (வயது 69) ஒருமனதாக இன்று தேர்வு செய்யப்பட்டார்.

    சபாநாயகர் பதவிக்கு தீக்‌ஷித் மட்டுமே நேற்று மனுத்தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.



    சபாநாயகராக தீக்‌ஷித் தேர்வானது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில் “வாழ்த்துக்கள் தீக்‌ஷித். உங்களது தலைமையில் இந்த சபை சுமூகமாக செயல்படும் என நம்பிக்கை உள்ளது. உங்களை சபாநாயகராகத் தேர்வு செய்ததில் இந்த சபை மகிழ்ச்சி அடைகிறது. சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

    5 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த தீக்‌ஷித் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×