search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தருவதில் தமிழகத்திற்கு 4-வது இடம்: வெங்கையா நாயுடு தகவல்
    X

    நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தருவதில் தமிழகத்திற்கு 4-வது இடம்: வெங்கையா நாயுடு தகவல்

    நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதில் தமிழகம் 4-வது இடம் பிடித்துள்ளதாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
    புது டெல்லி:

    நாடு முழுவதும் 7 வருடங்களில் 2 கோடி வீடுகளை கட்டவேண்டும் என்ற நோக்கத்திலே, கடந்த 2015-ம் ஆண்டு நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் வரும் 2022-ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.

    நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டமானது கொண்டுவரப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதில் தமிழகம் 4-வது இடம் பிடித்துள்ளதாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து இன்று மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு பேசுகையில் “நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதில் குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. குஜராத் மாநிலத்தில் 25,783 வீடுகளும், ராஜஸ்தான் மாநிலத்தில் 10,805 வீடுகளும், கர்நாடகா மாநிலத்தில் 10,447 வீடுகளும் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன.

    6,940 வீடுகளுடன் தமிழகம் இதில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் சென்னையில் 1,279 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நகரங்களின் பட்டியலைப் பொறுத்தவரை சென்னை 5-வது இடத்தைப் பிடித்துள்ளது" என்றார்.
    Next Story
    ×