search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டியத்தில் 115.7 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி
    X

    மராட்டியத்தில் 115.7 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

    மராட்டிய மாநிலத்தில் நேற்று நாட்டின் மற்ற பகுதிகளை விட வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. அம்மாநிலத்தின் பிர்ரா டவுனில் நேற்று 115.7 டிகிரி செல்ஜியஸ் வெயில் தாக்கியது.
    புதுடெல்லி:

    நடப்பாண்டில் வெயில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக, மிக உக்கிரமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதை உறுதிப்படுத்துவது போல தற்போது வட மாநிலங்களில் கோடை வெயிலையும் மிஞ்சும் வகையில் வெயில் அடித்து வருகிறது.

    மராட்டிய மாநிலத்தில் நேற்று நாட்டின் மற்ற பகுதிகளை விட வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. அம்மாநிலத்தின் பிர்ரா டவுனில் நேற்று 115.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் தாக்கியது.



    வரும் நாட்களில் வெயில் அளவு அதிகரிக்கும் என்று வானிலை இலாகா கூறியுள்ளது. கடும் வெயில் காரணமாக மராட்டிய மாநில மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள்.

    வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அடுத்த வாரம் முதல் நாட்டின் வட மாநிலங்களில் அனல் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம், தெற்கு உத்தர பிரதேசம் பகுதிகளில் அனல் காற்று அதிகமாக இருக்கும்.

    ஏப்ரல் 1-ந்தேதி முதல் வெயில் அளவு குறைந்த பட்சம் 100 டிகிரி பாரன்ஹீட் இருக்கும். எனவே மக்கள் முன்எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும் என்று வானிலை இலாகா அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×