search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் வெளியான விவகாரம்: கேரள அரசு விளக்கம் அளிக்க உம்மன்சாண்டி வலியுறுத்தல்
    X

    எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் வெளியான விவகாரம்: கேரள அரசு விளக்கம் அளிக்க உம்மன்சாண்டி வலியுறுத்தல்

    எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன்சாண்டி வலியுறுத்தி உள்ளார்.
    கோழிக்கோடு:

    கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வு கடந்த 20-ந் தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக தெரிகிறது. இது தொடர்பாக கண்ணூரை சேர்ந்த ஒரு ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் வினாத்தாள் தயாரிக்கும் குழுத்தலைவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசை எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன்சாண்டி வலியுறுத்தி உள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘வினாத்தாள் வெளியான விவகாரத்தால் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர். இதில் அதிகாரிகளிடம் இருந்து சரியான விளக்கம் தேவை என அவர்கள் விரும்புகின்றனர். எனவே மாநில அரசு இந்த விவகாரத்தில் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். தனது ஆட்சிக்காலத்தில் மூணாறில் ஆக்கிரமிப்பு நடந்ததாக மற்றொரு முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன் கூறியிருக்கும் புகார் தவறானது என்றும் உம்மன்சாண்டி கூறினார். 
    Next Story
    ×