search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவிலக்கின்போது பெண்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லக்கூடாது: கேரள காங். தலைவர் கருத்து
    X

    மாதவிலக்கின்போது பெண்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லக்கூடாது: கேரள காங். தலைவர் கருத்து

    பெண்கள் மாதவிலக்கு நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லக்கூடாது என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த சுதீரன் சமீபத்தில் தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால தலைவராக எம்.எம்.ஹசன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.

    தலைவர் பதவிக்கு வந்ததும் கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சியில், பெண்கள் கோவிலுக்கு செல்வது குறித்து அவர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “மாதவிடாய் தூய்மையற்ற நிலை. எனவே, மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது. இந்த கால கட்டத்தில் முஸ்லிம் பெண்கள் நோன்பு இருப்பதில்லை. பெண்களின் உடல் தூய்மையற்று இருப்பதால் கோவில், மசூதி அல்லது சர்ச் என வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லக்கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து” என்றார்.
    Next Story
    ×