search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறைச்சிக் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 25 காளைகள் மீட்பு: எட்டு பேர் கைது
    X

    இறைச்சிக் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 25 காளைகள் மீட்பு: எட்டு பேர் கைது

    உத்தர பிரதேச மாநில போலீசார் இறைச்சி கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சுமார் 25 காளைகளை மீட்டு, எட்டு பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் இறைச்சிக் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 25 காளைகளை போலீசார் மீட்டு, எட்டு பேரை கைது செய்துள்ளனர். கம்சான் ஆற்றின் அருகே இருக்கும் இறைச்சிக் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட காளைகளை போலீசார் டீஹாட் கோட்வாலி என்ற பகுதியில் மீட்டனர். 

    காளைகளுடன் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் கஸ்காஞ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் காளைகளை வாங்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் காளைகளை அடையாளம் கண்டு அவற்றை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க-வின் யோகி ஆதித்யநாத் முதல்மந்திரியாக பதவி வகித்து வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தில் உள்ள சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கு உத்தரவிட்ட அவர், இறைச்சி வெட்டுவதற்கும் தடை விதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×