search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சரின் எச்சரிக்கையால் மகாராஷ்டிரா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்
    X

    முதலமைச்சரின் எச்சரிக்கையால் மகாராஷ்டிரா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

    முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மும்பை ஐகோர்ட்டின் கடும் எதிர்ப்பால் மகாராஷ்டிரா மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் துலே என்ற இடத்தில் நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கு பணியிலிருந்த மருத்துவரை கடுமையாக தாக்கினர். இதில் மருத்துவர் படுகாயமடைந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த சக மருத்துவர்கள், மற்றும் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் கடந்த 4 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதனையடுத்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மருத்துவர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். போராடும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பவேண்டும் என ஐகோர்ட் நேற்று வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறிய மருத்துவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால், போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளை அழைத்து மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என்று பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்தார். அதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது உறுதி அளித்தார்.



    அதுமட்டுமல்லாமல் மும்பை ஐகோர்ட்டும் போராடும் மருத்துவர்களுக்கு இன்று கடும் கண்டனம் தெரிவித்தது. போராட்டத்தை கைவிடாவிட்டால் கண்டன நடவடிக்கைகள் தொடங்கும் என்று கூறியது.

    இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மும்பை ஐகோர்ட்டின் எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
    Next Story
    ×