search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களுருவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த மர்ம வாலிபர் சிக்கினார்
    X

    பெங்களுருவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த மர்ம வாலிபர் சிக்கினார்

    பெங்களுருவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த மர்ம வாலிபரை கண்காணிப்பு கேமிரா மூலம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் மகளிர் கலை கல்லூரி மற்றும் மேனேஜிமெண்ட் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் பெண்கள் துணிகளை துவைத்து அதனை கல்லூரி மொட்டை மாடியில் வெயிலில் உலற வைப்பது வழக்கம்.

    சமீபகாலமாக மொட்டை மாடியில் பெண்கள் உலற வைக்கும் துணிகளில் உள்ளாடைகள் மட்டும் அடிக்கடி காணாமல் போனது. இந்த துணிகளை திருடுவது மாணவியா? அல்லது வேறு யாராவது மர்மநபர்களா இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்தது. இது பற்றி விடுதி நிர்வாகத்திடமும் பெண்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 12 மணி அளவில் பெண்கள் அணியும் உள்ளாடையை அணிந்து கொண்டு வாலிபர் ஒருவர் கல்லூரிக்குள் ஏறி குதித்தார். பின்னர், விடுதியில் உள்ள அறைகளில் இருக்கும் ஜன்னல் வழியாக யாராவது இருக்கிறார்களா? என அந்த வாலிபர் எட்டி பார்த்தார். அப்போது விடுதி அறையில் இருந்த பெண்கள் வாலிபரை கண்டதும் அலறினார்கள்.

    சத்தத்தை கேட்டதும் விடுதி காவலாளி லத்தியை எடுத்து கொண்டு அந்த வாலிபரை பிடிக்க அங்கு ஓடி வந்தார். மேலும் பெண்களும் கையில் பெரிய கம்புகளுடன் அந்த வாலிபரை பிடிக்க அங்கு வந்தனர்.

    அப்போது அந்த வாலிபர் காவலாளியும், பெண்களும் தன்னை பிடிக்க வருவதை கண்டதும் விடுதி சிலாப்பில் ஏறி தப்பி ஓட முயன்றார். ஆனால் காவலாளி விரைந்து சென்று அந்த வாலிபரை லத்தியால் அடித்தார். இருப்பினும் அந்த வாலிபர் சிலாப்பில் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள காண்காணிப்பு கேமிராவில் பதிவானது. இது குறித்து விடுதி காவலாளி கூறுகையில்,

    மொட்டை மாடியில் பெண்கள் உலற வைத்த துணிகளை மர்மநபர் ஒருவர் எடுப்பதை கண்டதும் நான் சத்தம் போட்டப்படி லத்தியை எடுத்துக் கொண்டு அந்த நபரை பிடிக்க வேகமாக ஓடினேன்.

    அப்போது அந்த மர்ம நபர் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து இருந்தார். இதனால் அவனை என்னால் பிடிக்க முடியாமல் போய் விட்டது. பெண்கள் அணியும் உள்ளாடை அவன் அணிந்திருந்தான். கத்தியும் வைத்திருந்தான். உடல் முழுவதும் எண்ணெய் பூசி விட்டு வந்ததால் அவனை பிடிக்க முடியவில்லை என்றார்.

    இந்த சம்பவம் குறித்து விடுதி நிர்வாகம் சார்பில் ஹைகிராண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்போது எங்கு தங்கி இருக்கிறார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    போலீசாரின் இந்த தீவிர விசாரணையில் அந்த வாலிபர் கல்லூரி அருகே உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த மர்ம வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி தெரியவரும்.
    Next Story
    ×