search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலேஷ் யாதவ்வின் சொந்த ஊரில் தினசரி 4 மணி நேரம் ‘பவர்கட்’
    X

    அகிலேஷ் யாதவ்வின் சொந்த ஊரில் தினசரி 4 மணி நேரம் ‘பவர்கட்’

    உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் கிராமத்தினர் தினசரி 4 மணி நேர பவர்கட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 325 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க கட்சி உத்தர பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.பா.ஜ.க சார்பில் யோகி ஆதித்யநாத் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் சொந்த ஊரான சைஃபை( எட்வா மாவட்டம்) பகுதி மக்கள் தினசரி 4 மணி நேர பவர்கட்டால் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



    இதற்கு முன் 24 மணி நேரமும் மின்சார வசதியை அனுபவித்த சைஃபை மக்கள் தற்போது மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து சைஃபை மின் விநியோக செயற்பொறியாளர் குலீப் குமார் கூறுகையில் “ மார்ச் 20 முதல் மின்விநியோக அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி வட்டங்களுக்கு 20 மணி நேரமும், கிராமங்களுக்கு 18 மணி நேரமும் மின் விநியோகம் செய்யப்படுகிறது” என்றார்.

    எட்வா மாவட்டத்துக்கு 24 மணி நேரம் மின் விநியோகம் செய்யப்படுவதாகவும், இதனை மாற்றியமைக்கும்படி அரசிடம் இருந்து எந்தவொரு உத்தரவும் வரவில்லையென்றும் இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
    Next Story
    ×