search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டேட் வங்கியுடன் பாரதீய மகிளா வங்கி இணைப்பு: மத்திய அரசு ஒப்புதல்
    X

    ஸ்டேட் வங்கியுடன் பாரதீய மகிளா வங்கி இணைப்பு: மத்திய அரசு ஒப்புதல்

    ஸ்டேட் வங்கியுடன் பாரதீய மகிளா வங்கியை இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாரதீய மகிளா வங்கி 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி தொடங்கப்பட்டது. அதாவது வங்கி தொடங்கி 3 ஆண்டுகள் 3 மாதங்கள் தான் ஆகின்றன.

    இந்நிலையில், தொடங்கி 3 வருடங்கள் ஆன நிலையில், ஸ்டேட் வங்கியுடன் பாரதீய மகிளா வங்கியை இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த வாரம் இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளித்து இருந்தது.

    இது தொடர்பாக நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எஸ்.பி.ஐ குழுமத்தில் பெண்களுக்கு என ஏற்கனவே 126 தனிக் கிளைகள் உள்ளன. ஆனால் மகிளா வங்கியில் 7 கிளைகள் தான் உள்ளது. மகிளா வங்கியை நிர்வகிக்க அதிக அளவில் தொகை செலவிட வேண்டியுள்ளது.

    இரண்டு வங்கிகளையும் இணைத்து பெண்களுக்கு அதிக அளவில் பலன்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. மகிளா வங்கி தொடங்கப்பட்டது முதல் கடந்த 3 வருடங்களில் பெண்களுக்கு 192 கோடி வங்கி கடன் அளித்துள்ளது. ஆனால் எஸ்.பி.ஐ. பெண்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி கடன் அளித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் , ஸ்டேட் பேங்க் ஆப் பட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் ஜெய்பூர் ஆகியவற்றை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×