search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி வெற்றி தந்த உற்சாகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க
    X

    உ.பி வெற்றி தந்த உற்சாகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க

    நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளதால் வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பா.ஜ.க தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    லக்னோ:

    நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப் தவிர உத்தரப்பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் அசுர வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள பா.ஜ.க, கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் ஆட்சியமைத்துள்ளன.

    குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.  இந்த வெற்றியை வரும் 18-ம் தேதி ’விஜய் உத்சவ்’ என்ற பெயரில் கொண்டாட பா.ஜ.க முடிவெடுத்துள்ளது. மேலும், அன்றைய தினமே 2019 நாடாளுமன்ற தேர்தல் (மக்களவைத் தேர்தல்) பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தலைமையில் பா.ஜ.க வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களுக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் பா.ஜ.க மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சியின் கீழ் 15 மாநிலங்கள் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×