search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் கடத்தலில் பா.ஜ.க. பெண் பிரமுகர்க்கு தொடர்பு
    X

    குழந்தைகள் கடத்தலில் பா.ஜ.க. பெண் பிரமுகர்க்கு தொடர்பு

    மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளை கடத்திய சம்பவம் நடந்தது தெரிய வந்தது.

    இங்கு பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் அவர்களுடைய குழந்தை குறை பிரசவத்தில் பிறந்து இறந்து விட்டதாக கூறி ஏமாற்றி அந்த குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வது தெரிந்தது.

    இதுபோன்ற செயல் களில் ஈடுபட்ட சில ஆஸ் பத்திரிகளை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் ஆதர வற்ற இல்லங்களில் சேரும் குழந்தைகளும் இதுபோல் கடத்தப்பட்டு இருந்தன.

    இந்த கடத்தலில் பெரிய கும்பல் ஒன்று சம்பந்தப்பட்டு இருந்தது. அவர்கள் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளை இவ்வாறு கடத்தி இருந்தனர்.

    இது தொடர்பாக டாக்டர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 12-க் கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னணியில் மேலும் பலர் இருப்பது தெரிய வந்தது. அவர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாரதீய ஜனதா மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் ஜுகி சவுத்ரிக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்தனர்.

    எனவே, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சென்றனர். ஆனால், இதுபற்றி முன்கூட்டியே தகவல் அறிந்த ஜுகி சவுத்ரி தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது.

    பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக மேற்கு வங்க பாரதீய ஜனதா மகளிர் தலைவியும், எம்.பி.யுமான ரூபா கங்குலி கூறும்போது, குழந்தை கடத்தலில் ஜுகி சவுத்ரிக்கு எந்த தொடர்பும் இருக்காது என்று நான் கருதுகிறேன்.

    அவரை சி.ஐ.டி. போலீசார் மோசமாக நடத்த கூடும் என்பதால் அவர் தலைமறைவாக இருப்பதாக கருதுகிறேன். ஜுகி சவுத்ரி தைரியமாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ கூறும் போது, குழந்தை கடத்தலில் ஜுகி சவுத்ரிக்கு தொடர்பு இருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கட்டும்.

    ஆனால், அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு இந்த வி‌ஷயத்தை கையில் எடுக்க கூடாது. மாநில போலீஸ் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
    Next Story
    ×