search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6, 7-வது கட்ட தேர்தல்: பிரதமர் மோடி 5-ந்தேதி வாரணாசியில் பிரசாரம்
    X

    6, 7-வது கட்ட தேர்தல்: பிரதமர் மோடி 5-ந்தேதி வாரணாசியில் பிரசாரம்

    உத்தரபிரதேசத்தில் 6-வது 7-வது கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி வாரணாசியில் 5-ந் தேதி மாலை பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் 7 கட்ட சட்டசபை தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    அடுத்து 6-வது கட்ட தேர்தல் மார்ச் 4-ந்தேதி நடைபெற உள்ளது. இறுதி 7-ம் கட்ட தேர்தல் மார்ச் 8-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்த இரு கட்ட தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மார்ச் 3, 4, 5-ந்தேதிகளில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உத்தரபிரதேசம் செல்கிறார்.

    3-ந்தேதி பிரதமர் மோடி ஜனூன்நகரில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 4-ந்தேதி மிர்சாபூரில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை வாரணாசியில் நிறைவு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். வாரணாசி அவரது சொந்த தொகுதியாகும்.

    எனவே வாரணாசியில் சில கோவில்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். 5-ந் தேதி மாலை பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார்.

    வாரணாசியில் 5-ந்தேதி (ஞாயிறு) பிரமாண்ட ரோடு-ஷோ நடத்தவும் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். வாரணாசி தொகுதி மக்களை சந்திக்கும் வகையில் இந்த பிரசாரம் இருக்கும் என்று தெரிகிறது.

    வாரணாசியில் இது தொடர்பாக ஆய்வு செய்த பிரதமரின் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இன்னும் தங்கள் முடிவை சொல்லவில்லை. அவர்கள் கருத்து தெரிவித்த பிறகே பிரதமர் மோடியின் ரோடு-ஷோ நடைபெறுமா? என்பது தெரிய வரும்.

    இதற்கிடையே மோடியின் வாரணாசி பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்க ராகுல் - அகிலேஷ் இருவரும் தயாராகி வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து வாரணாசியில் 6-ந்தேதி பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×