search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சண்டிகரில் ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு அமலுக்கு வருகிறது
    X

    சண்டிகரில் ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு அமலுக்கு வருகிறது

    சண்டிகரில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதுவிலக்கு அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
    இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம், பீகார் ஆகிய மாநிலங்களில் மதுவிலக்கு ஏற்கனவே அமலில் உள்ளது. இந்நிலையில் சண்டிகர் நகரமும் இப்பட்டியலில் இணையவுள்ளது.

    சண்டிகரில் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதுவிலக்கு அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்து சண்டிகர் உள்துறை செயலாளர் அனுராக் அகர்வால் கூறுகையில் “பார்கள், மதுபான விடுதிகள் ஆகியவற்றில் ஏப்ரல் 1 முதல் மதுவிற்பனை அமலில் இருக்காது” என தெரிவித்துள்ளார்.

    தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்கு மதுபார்கள் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகரை இணைக்கும் எல்லா முக்கிய சாலைகளும் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைவதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சண்டிகரில் மதுவிலக்கு அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×