search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலால் 45 பேர் பாதிப்பு
    X

    சித்தூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலால் 45 பேர் பாதிப்பு

    சித்தூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலால் 45 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    திருமலை:

    சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதுபற்றி டெல்லியில் உள்ள சுவைன் புளு ஒழிப்புத்திட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், டெல்லி சுவைன் புளு ஒழிப்புத்திட்ட அதிகாரிகள் டாக்டர் அசோக்சக்கரவர்த்தி, டாக்டர் பிரணாப் புயான் மற்றும் டாக்டர்கள் ஸ்ரீலட்சுமி, பார்கவி, ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பதி ருயா மற்றும் சுவிம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு வந்து நேரில் பார்வையிட்டனர். மேற்கண்ட இரு ஆஸ்பத்திரிகளில் தனியாக தொடங்கப்பட்டுள்ள பன்றிக்காய்ச்சல் மருத்துவ சிகிச்சை பிரிவை பார்வையிட்டனர்.

    அதைத்தொடர்ந்து திருப்பதி ருயா ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் சித்திவிநாயக், டெல்லி டாக்டர்கள் ஆகியோருடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அதில் டாக்டர்கள் கீதாஞ்சலி, ஸ்ரீஹரி, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் வெங்கடபிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டாக்டர் சித்திவிநாயக் பேசியதாவது:-

    சித்தூர் மாவட்டத்தில் 45 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதில் 15 பேருக்கு பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுவைன் புளு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

    பன்றிக்காய்ச்சல் தொடர்பாக அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு மருத்துவக்குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள். திருப்பதி நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கழிவுநீர் தேங்கினால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பன்றிக்காய்ச்சல் அதிக அளவில் பரவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×