search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு தேவை இல்லாமல் அரசியல் செய்கிறது: சித்தராமையா குற்றச்சாட்டு
    X

    தமிழக அரசு தேவை இல்லாமல் அரசியல் செய்கிறது: சித்தராமையா குற்றச்சாட்டு

    மேகதாது அணை கட்டும் வி‌ஷயத்தில் தமிழக அரசு தேவை இல்லாமல் அரசியல் செய்கிறது என கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
    பெங்களூர்:

    பெங்களூர் குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார்.

    பின்னர் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த முதல்-மந்திரி சித்தராமையாவிடம் தமிழக முதல்-அமைச்சர் பிரதம மந்திரிக்கு மேகதாது அணை திட்டம் குறித்து கடிதம் எழுதி இருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

    இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

    தமிழக அரசு மேகதாது அணை கட்டும் வி‌ஷயத்தில் தேவை இல்லாமல் அரசியல் செய்கிறது. கர்நாடகத்திற்கு சட்ட ரீதியாகவும், தொழிற் நுட்ப ரீதியாகவும் அணை கட்ட முழு உரிமை உள்ளது. கர்நாடகத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் இந்த பணி நிறைவேற்றப்படுவதால் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய தேவையில்லை.



    காவிரியில் நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். வழக்கமாக மழை பெய்யும்போது தண்ணீர் வழங்குவதில் சிக்கல் இருக்காது. பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார தேவைக்காக மேகதாது அணை கட்டப்படுகிறது. இத்திட்டத்திற்கு தமிழகம் தேவை இல்லாமல் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×