search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி மாநகராட்சி தேர்தல்: வீடு வீடாக பிரசாரம் செய்ய காங்கிரஸ் திட்டம்
    X

    டெல்லி மாநகராட்சி தேர்தல்: வீடு வீடாக பிரசாரம் செய்ய காங்கிரஸ் திட்டம்

    டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஒவ்வொரு பூத்துக்கும் 15 தொண்டர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    யூனியன் பிரதேசமான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

    டெல்லி மாநகராட்சிக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு மொத்தம் 272 வார்டுகள் உள்ளன.

    டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற காங்கிரஸ் பல்வேறு வகையான முடிவுகளை கையாண்டு வருகிறது. வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டு உள்ளது. காங்கிரஸ் செயல் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசனைபடி ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பாரதீய ஜனதா, ஆம்ஆத்மி ஆட்சிகளின் தோல்வியை மக்களிடம் விளக்கி ஆதரவு திரட்டுகிறார்கள். பாராளுமன்றம், சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் காங்கிரஸ் தற்போது மாநகராட்சி தேர்தலில் இந்த முடிவை மேற்கொண்டு உள்ளது.

    2 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் ஆதரவு திரட்டுவார்கள்.பூத் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு பூத்துக்கு 15 தொண்டர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு தொண்டரும் 60 முதல் 70 வாக்காளர்களை (16 வீடுகள்) சந்தித்து காங்கிரசுக்கு ஆதரவை திரட்டுவார்கள்.

    70 சட்டசபை கொண்ட டெல்லியில் மொத்தம் 13 ஆயிரம் வாக்கு சாவடிகள் (பூத்) உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் 40 வாக்கு சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியை தான் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சத்தார்சிங் கூறியதாவது:-

    ராகுல்காந்தியின் அறிவுரைப்படி டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஒவ்வொரு பூத்துக்கும் 15 தொண்டர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரசாரம் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மராட்டிய மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை தழுவியது. இது மாதிரியாக நடைபெற்று விடாமல் இருக்க டெல்லி மாநகராட்சி தேர்தலில் தீவிர பிரசாரம் மேற் கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×