search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் 5-வது கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு
    X

    உத்தரபிரதேசத்தில் 5-வது கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் உத்தரபிரதேசத்தில் 5-வது கட்ட தேர்தலை சந்திக்கும் 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப் பதிவு நடக்கிறது.
    லக்னோ:

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் உத்தரபிரதேசத்தில் 5-வது கட்ட தேர்தலை சந்திக்கும் 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப் பதிவு நடக்கிறது.

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது உத்தரபிரதேச சட்ட சபை தேர்தல். 7 கட்ட தேர்தலை சந்திக்கும் இந்த மாநிலத்தில் 4 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 5-வது கட்டமாக நாளை (திங்கட்கிழமை) 52 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்க இருந்தது. ஆனால் ஒரு தொகுதியில் ஆளும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் அங்கு மார்ச் 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    நாளை தேர்தல் நடைபெறுகிற 51 தொகுதிகள், அமேதி, சுல்தான்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ளன.

    இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர்களில் 9 மந்திரிகளும், சட்டசபை சபாநாயகர் மாதா பிரசாத் பாண்டேயும் அடங்குவர்.

    1 கோடியே 84 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். இவர்களுக்காக 19 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சமாஜ்வாடி கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி பாஸ்தி, பஹ்ரியாச், கோண்டாவில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஓட்டு சேகரித்தார்.

    சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும், பகுஜன் சமாஜ் கட்சிக்காக அதன் தலைவர் மாயாவதியும் புயல்வேக பிரசாரம் செய்தனர். அகிலேஷ் யாதவ் 7 கூட்டங் களிலும், ராகுல் காந்தி 3 கூட்டங்களில் பங்கேற்று பேசினர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

    நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவு நடைபெறுகிற தொகுதிகளுக்கு மின்னணு ஓட்டு எந்திரங்களையும், பிற பொருட்களையும் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லும் பணி நடந்து வருகிறது.

    6-வது கட்டமாக 49 தொகுதிகளில் மார்ச் 4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. 
    Next Story
    ×