search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரபத்ர சுவாமிக்கு தங்கத்திலான மீசை - தெலுங்கானா முதல்வர் காணிக்கை
    X

    வீரபத்ர சுவாமிக்கு தங்கத்திலான மீசை - தெலுங்கானா முதல்வர் காணிக்கை

    தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு நேர்த்திக்கடனாக முதல்மந்திரி சந்திரசேகர ராவ் அங்குள்ள புகழ் பெற்ற வீரபத்ர சுவாமி கோவிலுக்கு தங்கத்திலான மீசையை காணிக்கையாக வழங்குகிறார்.
    ஐதராபாத்:

    ஒருங்கினைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கக் கோரி கடும் போராட்டங்கள் நடத்திய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், தனது போராட்டம் வெற்றி பெற்றால்  மஹபுபாபாத் மாவட்டம் குராவி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமான வீரபத்ர சுவாமி கோயிலில் உள்ள மூலவரான வீரபத்ர சுவாமிக்கு தங்கத்திலான மீசையை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருந்தார்.



    இதையடுத்து, 2014-ம் ஆண்டில் தெலுங்கானா தனி மாநிலமாக உருவெடுத்தது. அதே ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இந்நிலையில், தனது வேண்டுதலின் படி வீரபத்ர சுவாமி கோயிலில் உள்ள மூலவரான வீரபத்ர சுவாமிக்கு சுமார் 75,000 ரூபாய் மதிப்புடைய தங்கத்திலான மீசையை காணிக்கையாக சந்திரசேகர ராவ் விரைவில் வழங்க உள்ளார்.
    Next Story
    ×