search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. மேவா லால் சவுத்ரி கட்சியில் இருந்து நீக்கம்
    X

    ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. மேவா லால் சவுத்ரி கட்சியில் இருந்து நீக்கம்

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. மேவா லால் சவுத்ரி அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
    பாட்னா:

    பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் தாராப்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்வர் மேவா லால் சவுத்ரி. ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர், பீகார் வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகளை நியமித்ததில் முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து கவர்னர் ராம் நாத் கோவிந்த் உத்தவின்பேரில், எம்.எல்.ஏ. மேவா லால் சவுத்ரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    இந்நிலையில் எம்.எல்.ஏ. மேவா லால் சவுத்ரியை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முறைகேடு வழக்கு உள்ளதால் அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியிருப்பதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

    பீகாரில் விரைவில் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில், எம்.எல்.ஏ. மீதான ஊழல் வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பு வாய்ப்பு உள்ளது. எனவே, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×