search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும்: அகிலேசுக்கு மோடி பதிலடி
    X

    கழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும்: அகிலேசுக்கு மோடி பதிலடி

    கழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் என அகிலேஷ் யாதவுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
    லக்னோ:

    403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. 4-வது கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதில் உத்தர பிரதேச மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர்.

    இந்த தேர்தலில், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது. கடந்த 21-ம் தேதி உத்தர பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டமொன்றில் பேசினார். அப்போது குஜராத் கழுதைகளுக்காக அமிதாப்பச்சன் விளம்பரம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

    இதற்கு பிரதமர் மோடி பேசும்போது, கழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் என பதிலடி கொடுத்துள்ளார்.

    உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கட்டாயத்தின் பேரிலேயே நீங்கள்(சமாஜ்வாடி கட்சி) காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். உத்தர பிரதேசத்தில் மூழ்கும் நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி உங்களையும் சேர்த்து அழைத்து செல்கிறது. குஜராத் கழுதைகளைப் பார்த்து அகிலேஷ் பயந்து விட்டார். கழுதைகள் என்றும் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும்.



    அகிலேஷ் என்னைத் தாக்கிப் பேசினாரா? இல்லை பிஜேபி கட்சியை தாக்கிப் பேசினாரா? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கழுதைகளை அவர் தாக்கிப் பேசியுள்ளார்.

    உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, கழுதைகள் புகைப்படத்துடன் கூடிய ரப்பர் ஸ்டாம்ப்புகள் குஜராத்தில் வெளியானதை அகிலேஷ் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மீது கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களின் பெயரால் நீங்கள் வாக்குக் கேட்டால் உங்கள் ஆட்சி உத்தர பிரதேசத்தில் அமைய வாய்ப்பில்லை.

    இவ்வாறு மோடி பேசினார்.
    Next Story
    ×