search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் திருடியதாக சந்தேகம்: கொதிக்கும் எண்ணெயில் கையை விட சொல்லி கொடுமை
    X

    செல்போன் திருடியதாக சந்தேகம்: கொதிக்கும் எண்ணெயில் கையை விட சொல்லி கொடுமை

    மத்தியபிரதேச மாநிலத்தில் செல்போன் திருடியதாக சந்தேகமடைந்து கொதிக்கும் எண்ணெயில் சிறுவர்களை கையை விடு சொல்லிய கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் ரட்லம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெககான். சிறுவனான இவரது மகன் தனது நண்பர்களுடன் செல்போனை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தான். திடீரென அந்த செல்போன் காணாமல் போனது. இதுபற்றி தந்தையிடம் மகன் தெரிவித்தான்.

    அவருக்கு மகனுடன் விளையாடிய மற்ற சிறுவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்து விசாரித்தார். ஆனால், அவர்கள் செல்போனை எடுக்கவில்லை என்று கூறினார்கள்.

    இதனால் கோபம் அடைந்த ஜெககான் சிறுவர்களை கொதிக்கும் எண்ணெயில் கையை விட சொல்லி வற்புறுத்தினார். செல்போனை திருடவில்லை என்றால் கை வேகாது. திருடியவர் கைதான் காயம் படும் என்று அவர் கூறினார்.


    வேறு வழியில்லாமல் சிறுவர்கள் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டனர். இதனால் அவர்கள் கை வெந்து துடித்தனர். 5 சிறுவர்களுக்கு இதேபோல் காயம் ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுவர்களின் பெற்றோர்கள் ஜெககான் வீட்டுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தாக்கி விடலாம் என கருதிய ஜெககான் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெககானை தேடி வருகிறார்கள். படுகாயம் அடைந்த 5 சிறுவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×