search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரொக்கமில்லா பண பரிமாற்றம்: 10 லட்சம் பேருக்கு ரூ.153½ கோடி பரிசு
    X

    ரொக்கமில்லா பண பரிமாற்றம்: 10 லட்சம் பேருக்கு ரூ.153½ கோடி பரிசு

    ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் திட்டங்களின்கீழ் சுமார் 10 லட்சம் பேருக்கு ரூ.153½ கோடி பரிசாக இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இதில் மராட்டியம் முதலிடம் வகிக்கிறது.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ஒழித்து அறிவிப்பு வெளியிட்ட பின்னர், ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகிறார்.மேலும், ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு ‘லக்கி கிரஹாக் யோஜனா’ திட்டமும் (அதிர்ஷ்ட நுகர்வோர் திட்டம்), வியாபாரிகளுக்கு ‘டிகிதன் வியாபார் யோஜனா’ திட்டமும் (டிகி பண வர்த்தக திட்டம்) அறிவிக்கப்பட்டது.

    ரூ.50 முதல் ரூ.3 ஆயிரத்துக்குள் பொருட்களை வாங்குகிற பொதுமக்களுக்கான ‘லக்கி கிரஹாக் யோஜனா’வில் தினந்தோறும் குலுக்கல் நடத்தி 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000, அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இதேபோன்று வியாபாரிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்களின்கீழ் சுமார் 10 லட்சம் பேருக்கு ரூ.153½ கோடி பரிசாக இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் நுகர்வோர். 56 ஆயிரம் பேர் வியாபாரிகள்.

    ரொக்கமில்லா பண பரிமாற்றத்தில் மராட்டியம் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

    இந்த தகவல்களை இந்திய தேசிய பண பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) வெளியிட்டுள்ளது. 
    Next Story
    ×