search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2௦2௦-ம் ஆண்டுக்குள் இந்தியா பட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடையும்: வாரியத் தலைவர் நம்பிக்கை
    X

    2௦2௦-ம் ஆண்டுக்குள் இந்தியா பட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடையும்: வாரியத் தலைவர் நம்பிக்கை

    2௦2௦-ம் ஆண்டுக்குள் இந்தியா பட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என, மத்திய பட்டு வாரியத் தலைவர் கே.எம். ஹனுமந்தராயப்பா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    உலகில் அதிகம் பட்டு உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்நிலையில், இன்னும் 3 முதல் 4 வருடங்களில் குறிப்பாக 2௦2௦-ம் ஆண்டுக்குள் இந்தியா பட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என மத்திய பட்டு வாரியத் தலைவர் ஹனுமந்தராயப்பா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "தற்பொழுது 28,000 முதல் 30,000 மெட்ரிக் டன் வரை பட்டு உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறோம். வருடாவருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் 3 முதல் 4 வருடங்களில் சீனாவில் இருந்து பட்டு இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு, தேவையான அளவு பட்டினை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே எங்களது இலக்காக உள்ளது.



    உலகளவில் சுமார் 80% பட்டினை சீனாவும் 13% பட்டினை இந்தியாவும் மீதமுள்ள 7% பட்டினை மற்ற நாடுகளும் உற்பத்தி செய்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் 34,000 மெட்ரிக் டன் அதாவது 19% பட்டினை நாம் உற்பத்தி செய்தால் பட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்து விடும். இந்த இலக்கினை எட்ட இன்னும் 3-4 வருடங்கள் ஆகும்.

    பட்டு வாரியத்துறையைப் பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியாக விவசாயிகளுக்கு உதவிகளை செய்து வருகிறது.பட்டு உற்பத்தியைப் பெருக்க மாநில அரசுகளும் விவசாயிகளுக்கு துணைநிற்கின்றன'' என்றார்.
    Next Story
    ×