search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்திய 16 பேர் கைது
    X

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்திய 16 பேர் கைது

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்திய 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 75 செம்மரக்கட்டைகள், டெம்போ, கார், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருப்பதி:

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் திருப்பதி சிறப்புக்காவல் படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி, வாகனத்தில் கடத்த தயாராக வைத்திருந்தனர். அவர்கள், போலீசாரை பார்த்ததும், தப்பி ஓடினர். அந்தக் கும்பலை போலீசார் விரட்டிச்சென்று 16 பேரை பிடித்தனர்.

    பிடிபட்ட அவர்கள் சித்தூர் மாவட்டம் புத்தூரைச் சேர்ந்த மல்லி, உதய், திருப்பதியைச் சேர்ந்த ஜோதி, சுவமுலா, ஜெகதீஸ் என்கிற ஜெயபால், ரேணிகுண்டாவைச் சேர்ந்த கிருஷ்ணா, தமிழகத்தை சேர்ந்த பாண்டியன், தினேஷ், முரளிகிருஷ்ணா, சின்னராஜு, ராமசாமி, சவுந்திரராஜ், அசம்பிலால், ராம்ராஜ், பிரபகாகரன், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ் என்று தெரிய வந்தது. இதையடுத்து 16 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 75 செம்மரக்கட்டைகள், டெம்போ, கார், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×