search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபய் மனோகர் சப்ரே
    X
    அபய் மனோகர் சப்ரே

    காவிரி நடுவர் மன்ற தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அபய் மனோகர் சப்ரே நியமனம்

    காவிரி நடுவர் மன்ற தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அபய் மனோகர் சப்ரே நியமிக்கப்பட்டு உள்ளார்.
    புதுடெல்லி:

    நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி பல்பீர் சிங் சவுகான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சட்ட கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவி காலியாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து, தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருக்கும் அபய் மனோகர் சப்ரே தற்போது காவிரி நடுவர் மன்ற தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பரிந்துரையின்படி அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    நீதிபதி அபய் மனோகர் சப்ரே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநில ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றினார். மணிப்பூர், கவுகாத்தி ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி சப்ரே, வருகிற 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.

    காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தற்போது விசாரணையில் உள்ளன.

    இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க முகாந்திரம் உள்ளது என்றும், அவை விசாரணைக்கு ஏற்றவை என்றும் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×