search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
    X

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

    கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருகிற 13-ந் தேதிக்குள் விளக் கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.
    புதுடெல்லி:

    கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருகிற 13-ந் தேதிக்குள் விளக் கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.

    சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய ஒரு கடிதத்தில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளில் ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள நீதிபதிகளில் சிலர் ஊழல் பேர்வழிகள் என்று கூறி இருந்தார்.

    இந்த கடிதத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தாமாகவே முன்வந்து 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கைக்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், ஜே.செல்லமேஸ்வர், மதன் லோகர், பினாகி சந்திரகோஷ், குரியன் ஜோசப் ஆகிய 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கூறியதாவது:-

    நீதிபதி கர்ணன் எழுதியுள்ள கடிதத்தை கோர்ட்டில் வாசிப்பது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி, தற்போது நீதிபதியாக உள்ள அவருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கலாம். இந்த வழக்கில் உண்மை எதையும் கண்டறியத் தேவை இல்லை. இந்த கடிதத்தில் அனைத்தும் வெளிப்படையாக உள்ளது.

    நீதித்துறை தொடர்பான நடைமுறைக்கு முற்றிலும் களங்கம் விளைவித்துள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டு முன் உதாரணமாக விளங்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் பொறுத்துக் கொள்ளாது என்பதை மக்கள் உணர வேண்டும். நீதிபதி கர்ணனிடம் இருந்து அனைத்து நீதிமன்றம் மற்றும் நிர்வாகம் தொடர்பான பணிகளை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள் தங்களுக்குள் நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டனர். பிறகு நீதிபதிகள் கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்தனர். அது வருமாறு:-

    நீதிபதி சி.எஸ்.கர்ணன் வருகிற 13-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம், கொல்கத்தா ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகம் மூலமாக நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்க வேண்டும்.

    நீதிபதி சி.எஸ்.கர்ணன், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணி களை நிறைவேற்று வது நிறுத்தி வைக்கப் படுகிறது. அவருடைய வசம் உள்ள வழக்குகள் தொடர்பான கோப்புகளை உடனடியாக அவர் ஐகோர்ட்டு பதிவாளரி டம் ஒப்படைக்க வேண் டும். வருகிற 13-ந் தேதி அவர் சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு எதிரான வழக்கில் நேரடியாக ஆஜராக வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 
    Next Story
    ×