search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. தேர்தல்: 41 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
    X

    உ.பி. தேர்தல்: 41 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

    உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 41 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

    மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க, உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப்பிடிக்க கடும் முயற்சி எடுத்துவருகிறது. அதேபோல், கங்கிரஸ் கட்சியும் கூட்டணி முயற்சியில் ஈடுபட்டு வந்தது.

    இந்நிலையில், மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 41 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக காங்கிரஸ் கட்சி உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான 63 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கத்ய்.
    Next Story
    ×