search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரகாண்ட்: போட்டியிட சீட் கிடைக்காததால் ஆத்திரம், காங்கிரஸ் அலுவலகம் சூறையாடப்பட்டது
    X

    உத்தரகாண்ட்: போட்டியிட சீட் கிடைக்காததால் ஆத்திரம், காங்கிரஸ் அலுவலகம் சூறையாடப்பட்டது

    உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவாளர்களுக்கு போட்டியிட சீட் கொடுக்காததால் காங்கிரஸ் அலுவலகம் மீது தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
    டோராடூன்:

    உத்தரக்காண்ட் மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 63 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டது.

    அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நவீன் பிஷ்த் மற்றும் ஆர்யேந்திர ஷர்மா ஆகியோரது ஆதரவாளர்களுக்கு போட்டியிட சீட் வழங்கவில்லை. இதனால், வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரங்களிலேயே சீட் கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும், சிலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மேலிடமும் அதிருப்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
    Next Story
    ×