search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 2 பேர் கைது
    X

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 2 பேர் கைது

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
    திருமலை:

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்திரகிரி மண்டலம், முக்கோட்டி பகுதி அருகே 30க்கும் மேற்பட்டோர் உணவு பொருட்களுடன் வனப்பகுதிக்குள் செல்ல முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.

    தொடர்ந்து, நடத்திய விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த கடியன் ரவி, ஆண்டிகோவிந்தன் என்பதும், கடந்த 5 நாட்களாக சேஷாசலம் வனப்பகுதியில் தங்கியுள்ளதும் தெரிய வந்தது.

    மேலும், அவர்கள் அனைவரும் காய்கறிகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வனப்பகுதிக்கு செல்ல முயன்றதும் தெரிந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் மொத்தம் 60 மரங்களை வெட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வனப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்வதற்காக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×