search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முலாயம்சிங் ஆதரவாளர் மாயாவதி கட்சியில் இணைந்தார்
    X

    முலாயம்சிங் ஆதரவாளர் மாயாவதி கட்சியில் இணைந்தார்

    சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அம்பிகா சவுத்திரி அக்கட்சியில் இருந்து விலகி இன்று மாயாவதி முன்னிலையில பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் மந்திரி சபையில் மந்திரியாக இருந்தவர் அம்பிகா சவுத்திரி. இவர் முலாயம்சிங் யாதவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அம்பிகா சவுத்திரியை மந்திரி பதவியில் இருந்து அகிலேஷ் யாதவ் நீக்கினார். இதனால் அவர் அதிருப்தி அடைந்தார்.

    சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அம்பிகா சவுத்திரி அக்கட்சியில் இருந்து விலகி இன்று மாயாவதி முன்னிலையில பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அப்போது மாயாவதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் சிறுபான்மையினர் ஆதரவு பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தான் கிடைக்கும். அவர்கள் பா.ஜனதாவுக்கு முடிவு கட்டுவார்கள்.

    முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் ஆட்சி நடத்துவதில் தோல்வி அடைந்து விட்டார். தோல்வியை திசை திருப்பவே முலாயம்சிங் யாதவ் தனது தம்பி ஷிவ்பால் யாதவ் மூலமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×