search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுக்கு எதிராக மாயாவதி கட்சியுடன் லல்லு, சரத்யாதவ் கூட்டணி
    X

    பா.ஜனதாவுக்கு எதிராக மாயாவதி கட்சியுடன் லல்லு, சரத்யாதவ் கூட்டணி

    பா.ஜனதாவுக்கு எதிராக மாயாவதி கட்சியுடன் லல்லுபிரசாத், சரத்யாதவ் கட்சிகள் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன.

    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பா.ஜனதாவை வீழ்த்த மற்ற கட்சிகள் புதிய கூட்டணி வியூகம் அமைத்து வருகின்றன.

    இந்த தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பல சிறிய கட்சிகள் 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் ஓட்டுகள் பிரியும் என்பதால் இந்த ஓட்டுகளை பா.ஜனதாவுக்கு எதிராக ஒன்று சேர்க்க வேண்டும் என்று லல்லு கட்சி மற்றும் சரத்யாதவ் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இதையடுத்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளத் கட்சிகள் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன.


    இதுதொடர்பாக லல்லு மற்றும் சரத்யாதவ் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “பா.ஜனதா கட்சியை தோற்கடிக்க உத்தரபிரதேசத்தில் பலம் வாய்ந்த கூட்டணி தேவை, தனித்தனியாக நிற்பது, பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்து விடும்.

    எனவே பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும், பா.ஜனதாவை வீழ்த்த 1993-ம் ஆண்டு தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி சேர்ந்து ஆட்சியை பிடித்தது. இதன்மூலம் பா.ஜனதா ஆட்சிக்கு வருவது தடுக்கப்பட்டது.

    எனவே தற்போதைய தேர்தலில் சமாஜ் கட்சியுடன் ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    Next Story
    ×