search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் பிரிட்டன் வெளியுறவுத் துறை மந்திரி போரிஸ் ஜான்சன் சந்திப்பு
    X

    பிரதமர் மோடியுடன் பிரிட்டன் வெளியுறவுத் துறை மந்திரி போரிஸ் ஜான்சன் சந்திப்பு

    பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை மந்திரி போரிஸ் ஜான்சன் சந்தித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று வரும் ராய்சினா எனப்படும் புவிசார் அரசியல் மற்றும் பூகோள பொருளாதாரம் குறித்த கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியை போரிஸ் ஜான்சன் சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்தியா, இங்கிலாந்து இடையிலான நல்லுறவு குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின் போது மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து, நிதிமந்திரி அருண் ஜெட்லி மற்றும் வெளியுறவுத் துறை இணை மந்திரி அக்பர் உள்ளிட்டோரை ஜான்சன் சந்திக்க உள்ளார். நாளை கொல்கத்தா செல்லும் அவர் மேற்கு வங்காள முதல் மம்தா பானர்ஜி மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.

    முன்னதாக இந்தியா வரும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சன், இந்தியாவும், பிரிட்டனும் இயற்கையான நண்பர்கள் என்று கூறி இருந்தார்.

    தெரசா மே பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்த ஆண்டு இந்தியா வரும் முதல் பிரிட்டிஷ் மந்திரி ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×