search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி., உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
    X

    உ.பி., உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க இன்று வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாப், கோவா, உத்தரக்காண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலத்திற்கு ஒரே கட்டமாகவும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ஏழு கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. தேசிய கட்சியான பா.ஜ.க. அனைத்து மாநிலங்களிலும் அதிகாரத்தை கைப்பற்ற தீவிர களப்பணியாற்றி வருகிறது.

    இந்த நிலையில், உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும், 149 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல், உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 64 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று அக்கட்சி வெளியிட்டுள்ளது. டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.

    இதேபோல் கோவா மாநிலத்திற்கு மேலும் 7 வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதன்மூலம் மொத்தம் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 36 தொகுதிகளுக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    பஞ்சாப் தவிர அனைத்து மாநிலங்களிலும் பெரிய கூட்டணி இல்லாமல் தான் பா.ஜ.க களமிறங்குகிறது. அடுத்தக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் பா.ஜ.க தலைவர்களின் பிரச்சார சுற்று பயண விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×