search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 குழந்தைக்கு மேல் பெற்றால் சீட் கிடையாது: டெல்லி பள்ளியின் அடாவடி
    X

    2 குழந்தைக்கு மேல் பெற்றால் சீட் கிடையாது: டெல்லி பள்ளியின் அடாவடி

    டெல்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளி 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்களின் வாரிசுக்கு இங்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    மேற்கு டெல்லியில் உள்ள ராஜேந்திரா நகர் பகுதியில் சல்வான் என்ற பெயரில் ஒரு மழலையர் பள்ளியும், ஒரு ஆரம்பநிலை பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

    இந்நிலையில், மேற்படி விண்ணப்ப படிவங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகளுடன் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு இந்தப் பள்ளியில் இடம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற விசித்திர நிபந்தனை ஒன்றும் காணப்படுகிறது.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிபந்தனை தொடர்பாக, விளக்கம் அளித்துள்ள இப்பள்ளியின் நிர்வாகி சுஷில் சவான், நாட்டில் மக்கள்தொகை பெருகிக் கொண்டே வருவதை கருத்தில் கொண்டும், குறைந்த அளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    எனினும், தங்கள் பிள்ளைக்கு இந்தப் பள்ளியில் சீட் கிடைத்த பிறகு நான்கைந்து குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதியரை இவர் எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறார்? என்ற கேள்வி டெல்லிவாசிகளில் பலருக்கு எழாமல் இல்லை.
    Next Story
    ×