search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் இந்தியாவிற்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்: சி.பி.ஐ. வழக்குபதிவு
    X

    ஏர் இந்தியாவிற்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்: சி.பி.ஐ. வழக்குபதிவு

    ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 2011–ம் ஆண்டு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வாங்கியதில் ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 2011–ம் ஆண்டு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வாங்கியதில் ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதில் ஏர் இந்தியாவின் தலைமை கண்காணிப்பு அதிகாரி அளித்த அறிக்கைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம் பரிசீலித்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துமாறு பரிந்துரை செய்தது.

    சி.பி.ஐ. பரிசீலனை செய்ததில், வழக்குபதிவு செய்வதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கண்டறிந்தது. எனவே ஏர் இந்தியா, ஜெர்மனி நிறுவனமான எஸ்ஏபி ஏஜி மற்றும் சர்வதேச நிறுவனமான ஐ.பி.எம். ஆகியவற்றின் பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. ‘‘ மத்திய கண்காணிப்பு ஆணையம் செய்த சிபாரிசை ஆராய்ந்தபோது, ஏர் இந்தியாவுக்கு சாப்ட்வேர் வாங்கியதில் பணம் செலுத்தியதில், சேவைகள் வழங்கியதில் பலமுறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. எனவே வழக்கு பதிவு செய்துள்ளோம்’’ என்று சிபிஐ தெரிவித்தது.
    Next Story
    ×