search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு
    X

    பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு

    புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    புது டெல்லி:

    ஊழலை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை நாட்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    இதுகுறித்து மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதி இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    அதில், "பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்குத் தேவையான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிப்பது குறித்து கடந்த 2015-ம் ஆண்டே ரிசர்வ் வங்கியிடம் தகவல் அளிக்கப்பட்டு விட்டது’ என்று அவர் கூறினார்.

    பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒரு கோடி பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து குறிப்பிட்ட சில நகரங்களில் சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

    பிளாஸ்டிக் நோட்டுகளின் சராசரி ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதன்முறையாக ஆஸ்திரேலியா நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×